இந்திய அரசியலமைப்பு வினா விடைகள்
1. ___________ ன் படி சிறுபான்மையினர் மொழி, எழுத்து மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்கிறது.
பிரிவு 29
2. 6 முதல் 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இலவச கட்டாய கல்வி அளிக்க வகைச் செய்கிறது?
பிரிவு 21 A 2009
3. ஒருவரை கட்டாயமாகவோ அல்லது ஊதியமின்றியோ வேலை செய்ய வைத்தல்?
சுரண்டலுக்கு எதிரான உரிமை
4. பேச்சு மற்றும் கருத்துக்களை வெளியிடும் உரிமை?
சுதந்திர உரிமை
5. சுரங்கத் தொழிலில் அல்லது பாதுகாப்பற்ற பணிகளில் ஈடுபடுத்துவதைத் தடை செய்யும் பிரிவு?
பிரிவு 24
6. எந்தப் பிரிவில் மதத்தைப் பின்பற்றவும், பரப்புவதற்கான சுதந்திரமும் உண்டு என்று உத்திரவாதம் அளிக்கிறது?
பிரிவு 25
7. உரிமைகளில் மிகவும் உயர்ந்து இருப்பதாகும்?
மனித உரிமைகள்
8. அடிப்படை உரிமைகள் _________தலைப்புகளில் பிரிக்கப்படுகிறது?
6
9. இந்தியா ஒரு __________ நாடு.
சமயசார்பற்ற நாடு
10. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை அனுமதிக்கும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு?
பிரிவு 30
11. நன்னடத்தை, மரியாதை, நல்லொழுக்கம் ஆகியன பற்றி அறிவது?
நீதிநெறி உரிமைகள்
12. நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சமமாகக் கிடைக்க ௯டிய உரிமை?
சட்ட உரிமைகள்
13. தனி மனிதனுக்கு ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் வழங்கப்படுகிற வாக்குறுதிகள் அல்லது ஒப்பந்தங்கள் வாயிலாக தோற்றுவிக்கப்படும் உரிமை?
ஒப்பந்தம் மூலம் பெறும் உரிமைகள்
14. உரிமைகள் மசோதா என்பது அமெரிக்காவில் எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது?
15 டிசம்பர் 1791
15. உரிமைகள் மசோதாவை அறிமுகப்படுத்தியவர் யார்?
ஜேம்ஷ் மேடிசன்
0 Comments